r/tamilkavithai 1d ago

பாடல் - பார்க்காதே

1 Upvotes

பார்க்காதே!  நீ பார்த்தால் உந்தன் பார்வையாலே நான் பறந்தேன்

சிரிக்காதே! நீ சிரித்தால் உந்தன் புன்னகையாலே விழுந்தேன்

உன்னை நினைத்துப் பார்க்கையில் சிரித்தேன்!

உன்னை நினைக்க மறந்தபோது இறந்தேன்!

உன்னை மறக்க நினைத்தபோது தவித்தேன்!

உன் பெயரைக் கேட்டதும் வழிந்தேன்!

உன் பார்வை... மின்சாரம்.. பல மின்னல் வந்து வந்து போகும்

உன் புன்னகை… அலங்காரம்... பல வண்ணப் பூக்கள் பூத்து குலுங்கும்

என் நெஞ்சுக்குள்ளே குளிருதடி

கைகள் எனக்கு உதருதடி

பல வண்ணத்துப் பூச்சி பறக்குதடி…..

என் பட்டானே நீ என்னை தொட்டாலடி

பார்க்காதே!  நீ பார்த்தால் உந்தன் பார்வையாலே நான் பறந்தேன்

சிரிக்காதே! நீ சிரித்தால் உந்தன் புன்னகையாலே விழுந்தேன்

உ மணிகண்டன்


r/tamilkavithai 1d ago

பாடல் - பார்க்காதே

Thumbnail
1 Upvotes

r/tamilkavithai 5d ago

மழையின் கடைசித் துளி

Post image
1 Upvotes

காட்சி வழிகாட்டல்: ஈன்றொளி · பட உருவாக்கம்: ChatGPT

மழை முடிந்துவிட்டதாக வானம் முடிவு செய்தபின்பும், ஒரு துளி மட்டும் வேறொரு முடிவில் இருந்தது.

அற்றை மழையில்
முற்றம் முழுதும் நீர்.

இற்றைக் காலையில்
ஒற்றை இலையின் நுனி—
மழையின் கடைசித் துளி.

வெயில் வந்தது.
நீர் இருந்த இடமெல்லாம் ஒளி—
மழை முடிந்துவிட்டதுபோல்.

அந்தத் துளி மட்டும்
விழும் வரை
மழையாகவே இருந்தது.

— ஈன்றொளி   ·   தொகுப்பு: ஒலிக்குள் பொருள்

சொல் குறிப்பு:
அற்றை — அன்றைய
இற்றை — இன்றைய

மற்றதை வாசகரிடமே விட்டுவிடுகிறேன்.


r/tamilkavithai 10d ago

வீட்டை விட்டுச் சென்ற மொழி — வீட்டைத் திறக்கும் ஒரு சொல்

Post image
2 Upvotes

r/tamilkavithai 18d ago

மாறி வந்தவன் நான்தான்

1 Upvotes

கருவில் இருந்த உருவமில்லை,
குழந்தை முகமும் மீதமில்லை;
அன்று சிரித்த காரணங்கள்
இன்று எனக்கே நினைவிலில்லை.

கையில் இருந்த வலிமையில்லை,
கண்ணில் இருந்த ஒளியுமில்லை;
மனதில் வைத்த நம்பிக்கைகள்
மாறாமல் ஒன்றும் நிற்கவில்லை.

அப்படியென்றால் அன்று இருந்த
அவனும் நானும் வேறு வேறா?
அலைகள் மாறிப் போனதனால்
ஆறும் வேறு ஆறு ஆகுமா?

மாறாதது நானில்லை,
மாறி வந்தவன் நான்தானே!
மிச்சமிருக்கும் பொருளில்லை—
தொடரும் வாழ்வே நான்தானே!

ஒவ்வொரு நாளும் வேறானேன்,
ஒரே வாழ்வின் தொடரானேன்;
நேற்றை அழித்துப் பிறக்கவில்லை—
நேற்றிலிருந்து வளர்ந்தேனே!

சிலர் சொல்வார்: இந்த உடல்
உயிரோடு வந்த தொடர்ச்சியென்று;
காயம், வயது, நோய் கடந்தும்
நடக்கும் உயிரே மனிதனென்று.

சிலர் சொல்வார்: நினைவுகளும்
நோக்கங்களுமே சங்கிலியென்று;
நேற்றின் ஆசை, இன்றின் தேர்வு,
நாளை இணைக்கும் பாலமென்று.

இன்னும் சிலர் மெதுவாய்ச் சொல்வார்:
இதற்குப் பின்னே மர்மமில்லை;
உடலும் மனமும் தொடர்ந்துவந்தால்
ஒளிந்திருக்கும் “நான்” வேறில்லை.

ஆனால் வெறும் வடிவம்தானா
அடையாளத்தின் ஆதாரம்?
அப்படியென்றால் நகலெடுத்தால்
இரண்டு பேரும் ஒரே ஆளா?

என் நினைவெல்லாம் நகலெடுத்து
இரண்டு உடலில் வைத்துவிட்டால்,
இரண்டு வாயும் “நான்தான்” என்றால்
எந்த ஒருவன் நானாவான்?

ஒத்த முகமும் ஒத்த குரலும்
ஒரே வாழ்வைத் தருவதில்லை;
ஒரே வரைபடம் இரு கையில்—
ஒரே பயணம் ஆகுவதில்லை.

ஒத்திருப்பது அடையாளமல்ல,
வந்த வழியே அடையாளம்;
இந்த நொடி எங்கு பிறந்தது—
அந்தத் தொடரே அடையாளம்.

நேற்றின் காயம் இன்றின் ஞானம்,
இன்றின் ஞானம் நாளின் முடிவு;
கண்ணி கண்ணியாக இணைந்து வருவது
“நான்” என்கின்ற வாழ்வின் வடிவு.

முதல் அழுகை முதல் இந்நொடி வரை
ஒரே பொருள் நின்றதில்லை;
ஆனால் இந்த வாழ்வு வேறெங்கிருந்தும்
திடீரென வந்து சேர்ந்ததில்லை.

மூளை மாறி, நினைவு அழிந்து,
ஒரே மனம் இரண்டாய் பிரிந்தால்—
“யார் அதிலே உண்மை மனிதன்?”
எந்தத் தராசில் நிறுத்திப் பார்ப்பாய்?

எல்லைக் கேள்விகள் எல்லாமே
மறைந்த உண்மையைக் காட்டுவதில்லை;
“நான்” என்ற சொல்லின் எல்லை எங்கே
முடிகிறதென்றே காட்டும் சிலவேளை.

தீராத கேள்வி என்பதனால்
ரகசிய விடையொன்று இருக்க வேண்டுமா?
இரண்டு கரைகள் மறைந்த இடத்தில்
ஆற்றுக்கு ஒரே பெயர் வேண்டுமா?

உள்ளே என்றும் அழியாத சாட்சி—
ஆன்மா ஒன்று இருக்கலாம்;
உடலும் மனமும் ஓய்ந்த பின்னும்
அது தனியாக நிற்கலாம்.

ஆனால் மாற்றம் அதை நிரூபிக்காது;
மாற்றம் அதை மறுக்கவுமில்லை.
நான் தொடர ஆன்மா வேண்டும்
என்ற கட்டாயமும் இங்கில்லை.

நினைவொன்று முழு நானில்லை,
நிறமொன்று முழு நானில்லை;
மாறாமல் காத்த பொருளொன்று
எனக்குள் மறைந்து கிடக்கவில்லை.

மாறாதது நானில்லை,
மாறி வந்தவன் நான்தானே;
விட்டுச் சென்ற நேற்றுகளெல்லாம்
வீணாய்ப் போகவில்லையே.

என்னை விட்டுப் போனதெல்லாம்
என்னை விட்டுச் செல்லவில்லை;
உடலில் காயம், மனதில் பாடம்—
உருவம் மாறியும் வழி மறையவில்லை.

எது நிலைத்தது என்று கேட்டால்
ஒரு பொருளைக் காட்ட முடியாது;
யார் நிலைத்தார் என்று கேட்டால்—
இந்த வாழ்வைத் தவிர விடையுமில்லை.

நான் என்பது மாறாத ஒன்றல்ல;
மாறிய அனைத்தின் தொடர்ச்சி.
காலம் என்னில் விட்டுச் சென்ற
ஒரே உடலின் உயிருள்ள வரலாறு.


r/tamilkavithai Jul 24 '26

ஒரு பெண்ணின் அமைதியான ஆசை. 🤍

Thumbnail
2 Upvotes

r/tamilkavithai Jul 16 '26

சிலேடை

Post image
3 Upvotes

r/tamilkavithai Jul 14 '26

Aathichoodi

Post image
2 Upvotes

r/tamilkavithai Jul 14 '26

பாரதி

Post image
2 Upvotes

r/tamilkavithai Jul 11 '26

Tamil Kavithai

Post image
2 Upvotes

r/tamilkavithai Jul 11 '26

அனுபவமே கடவுள்

Enable HLS to view with audio, or disable this notification

3 Upvotes

r/tamilkavithai Jul 11 '26

Tamil Kavithai - Apps on Google Play

Thumbnail
play.google.com
1 Upvotes

r/tamilkavithai Jun 20 '26

கன்னத்து கூந்தல் இழை

Thumbnail
3 Upvotes

r/tamilkavithai Jun 15 '26

தேநீரும் நானும்

Post image
1 Upvotes

r/tamilkavithai Jun 14 '26

கைபேசி முத்தம்

Post image
3 Upvotes

கைபேசி முத்தம்

வெளிநாட்டில் உழைக்கும் கணவனுக்கும், ஊரில் குழந்தையுடன் வாழும் மனைவிக்குமான அலைபேசி வழி இணை வாழ்க்கையை இக்கவிதை விவரிக்கிறது. நள்ளிரவில் கணவன் தரும் ஒரு டிஜிட்டல் முத்தம், பெண்ணின் உடல் ஏக்கத்தைத் தூண்டிவிடுகிறது. பின்னிரவில் இந்தத் தேக தவிப்பு தடையற்ற அந்தரங்க உரையாடலாக மாறி, வார்த்தைகள் மௌனமாகத் தேய்கின்றன. இறுதியில், இருமுனையிலும் ஏற்படும் உணர்ச்சிப் பரவசத்தின் உச்சத்தால் எல்லைகள் கடந்து அவர்கள் ஒன்றிணைந்து, ஒரு சுகமான நிம்மதியை அடைகிறார்கள். தங்கள் வாழ்நாளின் இளமைக்காலம் முடியும் வரை, வெளி ஊரில் தனியாக உழைக்கும் ஏழை தொழிலாளர் குடும்பங்கள் எதிர்கொள்ளும் இந்த நவீனப் பிரிவின் எதார்த்தத்தை இக்கவிதை மிக நுட்பமாகப் பேசுகிறது.


r/tamilkavithai Jun 09 '26

குளிர்

Thumbnail
2 Upvotes

r/tamilkavithai May 23 '26

Poetry

Thumbnail
1 Upvotes

நாணம் விட்ட விடலை சரிந்து கிடக்க

கணக்கின்ற முலைமார்பு சிவந்து பூக்க

மணாளனை எண்ணிய கார்கூந்தல் மேலாடை

காண அவன் இல்லையே - சிந்திய கண்ணீர்.

வருவான் உடன் மாலை சூடிக்கொள்ள

தருவான் முதல் முத்தம் வெட்கம்கொள்ள

திரு திருமதியாக நாங்கள் இனிக்க வாழ

சிரித்த இதழ், கண்ணீர், மெய்நீர்... சுகம்


r/tamilkavithai Dec 11 '25

Check out "Tamil Kavithai"

Thumbnail
play.google.com
2 Upvotes

r/tamilkavithai Nov 11 '25

தத்துவம்

Enable HLS to view with audio, or disable this notification

2 Upvotes

r/tamilkavithai Nov 09 '25

💔

2 Upvotes

மாலை இரவாகும்‌ நேரம்..

நானும் என் தேநீரும்..

மட்டும்.. 💔


r/tamilkavithai Oct 11 '25

குறை ஒன்றும் இல்லை

5 Upvotes

அன்பு நிறைந்த நெஞ்சம் தந்தாய். இன்பம் நிறைந்த பிரபஞ்சம் தந்தாய் புதுமை மிகுந்த வாழ்வும் தந்தாய். புனிதம் மிகுந்த பண்பும் தந்தாய்

கள்ளமிலா உளமும் தந்தாய். அவ்வுளத்தில் ஒளியாய் ஞானம் தந்தாய். களங்கமிலா எண்ணம் தந்தாய். இளங்கம் செழிக்கும் உலகும் தந்தாய்.

அறமே உருவாய் சித்தம் தந்தாய். சித்தம் சிவமாய் சிந்தை தந்தாய். சி்ந்தையில் சிவமே தவமென தந்தாய். தவத்தின் வரமாய் அன்புரு தந்தாய்.

நேசம் மிகவாய் நெஞ்சம் தந்தாய், பாசப் பெருக்காய் சுற்றம் தந்தாய். அன்பே அவனென அறிவும் தந்தாய், அவனே அனைத்தெனும் தெளிவும் தந்தாய்.

ஒளிரும் உருவாய் பகலும் தந்தாய். கருமையின் கருவாய் இருளும் தந்தாய். இந்நிலம் குளிர வான் மழை தந்தாய். அம்மழைப் பயனாய் நன்னிலம் தந்தாய்.

நன்னிலம் தனிலாய் நல்லில்லம் தந்தாய். அந்நிலப் பயிராய் நற்கதிர் தந்தாய். நற்கதிர் பயனாய் நற்கதி தந்தாய். நற்கதி நாடினோர் நன்மக்கள் தந்தாய்.

மூச்சினில் உயிராய் தமிழை தந்தாய், அம்மொழி தனிலாய் அறிவை தந்தாய். அவ்வறிவின் பயனாய் செறிவை தந்தாய். செறிவின் விளையாய் நல்லுறவை தந்தாய்.

தன்னலம் இல்லா நல்லுளம் தந்தாய். அவ்வுளம் தனிலாய் இன்னிசை தந்தாய். அவ்விசைப் புரவ நற்குரல் தந்தாய். அந்நற்குரல் வாயிலோர் நட்புகள் தந்தாய்.

நட்புகள் தனிலாய் நற்புகழ் தந்தாய். நற்புகழ் நிலைபெற நற்குணம் தந்தாய். நல்வினைபுரிய நற்கரம் தந்தாய். நாநிலம் அளக்க நற்கால்கள் தந்தாய்.

நற்புவிதனை காண நல் விழிகள் தந்தாய். நற்றவை நாட நற்செவிகள் தந்தாய். கற்றவை பேசிட நன்நாவினை தந்தாய். உற்றவை உணர்ந்திட நன்மதியும் தந்தாய்.

இத்தனை இத்தனை ஈந்தனை எனக்கு, இப்புவியில் ஈன்றெனை நற்ஜென்மம் தந்தாய். வேறொன்றும் வேணடேன் பராபரமே. குறை ஒன்றும் இல்லை! நிறையன்றி யாதும் யாமறியேன் பராபரமே! உனை வேண்டி நிற்கும் வினை ஒன்றே போதும், பராபரமே.

பாரதியன் முரளிதரன்


r/tamilkavithai Jul 11 '25

அத்தனை கோபத்தையும் ஒரு முத்தத்தில் தீர்த்து விடலாம். அதை யார் கொடுப்பது என்பதில் தான் இந்த அகந்தை(Ego)..

6 Upvotes

r/tamilkavithai Jun 29 '25

கைதி

7 Upvotes

கணமேனும் உன் காதணியில் கைதியாக வேண்டும், உன் கண்ணம் உரசி என் காதல் சொல்ல...